ஆகஸ்ட் 15, 2018 அன்று கடைசியாக புதுப்பிக்கப்பட்டது
தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கை
English | 中文 | 日本語 | Español | Français | Deutsch | Italiano | Русский | Português | Polski | Nederlands | Čeština
Magyar | Svenska | Bahasa | العربية | தமிழ் | Türk | 한글 | Suomi | Монгол хэл | ไทย | Norsk | Ελληνικά | Slovenský
Shqiptare | Slovenščina | Македонски | Српски | Bosanski | Hrvatski | Montenegrin | Tiếng Việt
இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையானது, இயந்திரங்கள், பொருட்கள்அல்லது பிற சொத்துக்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய படைப்புகள் (கூட்டாக "சொத்துக்கள்") தொடர்பான விநியோக வலையமைப்புகள் (டீலர்கள் மற்றும் அவை தொடர்பான நிறுவனங்கள் உட்பட விநியோக வலையமைப்புகளில் இருந்து தகவல் சேகரிக்கும்"விநியோக வலையமைப்புகல்"), கூட்டு நிறுவனங்கள் (கீழே வரையறுகப்பட்டவாறு) மற்றும் எங்கள் மற்றும் அவர்களின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்கள் சேகரிப்பில் Caterpillar இங்க். -இன் நடைமுறைகளை விவரிக்கிறது (எங்களது கூட்டு நிறுவனங்களுடன், "Caterpillar," "நாங்கள்," "நமது" அல்லது "எங்கள்"). இந்தத் தகவலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் சேகரிக்கிறோம், இதில் அடங்குவது: (1) கணினிகள், APIகள், மற்றும் மொபைல் சாதனங்களில் அல்லது பயன்பாட்டிற்கான பயன்பாடுகள் மற்றும் தலங்கள்;(2) Caterpillar அல்லது பிற நிறுவனங்களால் மற்றும் (3) எமது விநியோக வலையமைப்புகள், பாகங்களின் உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் தயாரிக்கப்படும் டெலிமாடிக்ஸ் அல்லது பிற சாதனங்கள், ("சாதனங்கள்" மற்றும் பயன்பாடுகளுடன் கூட்டிணைந்து, "டிஜிட்டல் தயாரிப்புகள்"); இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையில், "நீங்கள்" என்பது நீங்கள் தனிநபராகவும், பொருந்தும் வகையில், நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் நிறுவனம் அல்லது அமைப்பு மற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும், முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.
எங்களுடைய டிஜிட்டல் தயாரிப்புகள் எந்தத் தகவல்களை பெறுகின்றன, உருவாக்குகின்றன, அனுப்புகின்றன என்பதையும், அந்தத் தகவல்களுடன் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் புரிந்துகொள்வதற்கு நீங்கள் இந்த அறிக்கையைச் சீராக தொடர்ந்து கவனமாகப் பரிசீலனை செய்யவேண்டும். எங்களுக்கு சிஸ்டம் டேட்டா, ஆபரேஷன்ஸ் டேட்டா அல்லது தனிப்பட்ட தகவல் (ஒவ்வொன்றும் கீழே வரையறுக்கப்பட்டவாறு) ஆகியவற்றை வழங்குவதன் மூலம், அந்தத் தகவலை நாங்கள் சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையின் நிபந்தனைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
நாங்கள் என்ன தகவல்களைச் சேகரிக்கலாம்
"தனிப்பட்ட தகவல்கள்" என்பவை ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றிய ஏதாவது தகவல் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணும் அல்லது அடையாளம் காணக்கூடிய தகவல், மேலும் Caterpillar உலகளாவிய தரவு தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்ட தகவல். இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையில் தெளிவுக்காகவும் வெளிப்படைத்தன்மைக்காவும் தனிப்பட்ட தகவல்களின் மேற்கோள்கள் உள்ளன, Caterpillar உலகளாவியத் தரவுகள் தனியுரிமை மற்றும் உங்கள் டிஜிட்டல் தயாரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய தனியுரிமை அறிக்கையானது, தனிப்பட்ட தகவல்களின் சேகரிப்பு, பயன்பாடு, பரிமாற்றம், வெளிப்படுத்தல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட அந்த ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையில் உள்ள எதுவும் Caterpillar உலகளாவியத் தரவு தனியுரிமை அறிக்கை அல்லது பொருந்தக்கூடிய தனியுரிமை அறிக்கைகளில் உள்ளவற்றை மாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை.
"சிஸ்டம் டேட்டா என்பது டிஜிட்டல் தயாரிப்புளால் உள்வாங்கப்படும் அல்லது உபயோகிக்கப்படும் தகவல்களாகும், அவற்றில் இவை அடங்கலாம்:
- வேலைக் கருவிகள் அல்லது சொத்துக்களுடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்கள் உட்பட, மாதிரி எண், வரிசை எண், ஆர்டர் எண், மென்பொருள் மற்றும் வன்பொருள் பதிப்பு எண்கள், செயல்திறன் மற்றும் கட்டமைப்பு ஆகியவை உள்ளிட்ட சாதனம், சொத்து மற்றும் உபகரணத் தகவல்கள்.
- மின்னணுத் தரவுகள், இதில் சென்சார் பதிவுகள், போக்குகள், செவ்வகப்படங்கள், நிகழ்வுத் தரவுகள், மற்ற எச்சரிக்கைகள், டிஜிட்டல் நிலைத் தரவுகள், பிழைக் குறியீடுகள், செயல்படாமல் இருக்கும் நேரம், தினசரி மற்றும் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு, உமிழ்வுத் தரவுகள், சேவை மீட்டர் மணிநேரங்கள், ஒரு சொத்திலிருந்து கைமுறையாகவோ அல்லது தானியங்கியாகவோ பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணுத் தரவுக் கோப்புகள், வாடிக்கையாளர், சொத்து மற்றும் சாதனம் பயன்படுத்தும் தகவல்தொடர்பு முறையைப் பொறுத்து பிற தரவுகள் ஆகியவை உள்ளடங்குகிறது.
- தணிக்கை தரவுகள், இதில் Caterpillar அல்லது மூன்றாம் தரப்புத் தணிக்கை அமைப்பைப் பயன்படுத்தி ஆய்வுகளின் முடிவுகள் உள்ளடங்குகிறது.
- சாதன இருப்பிடத் தகவல்கள், இதில் ஒரு சொத்தின் இருப்பிடம் உட்பட (எ.கா., செயற்கைக்கோள், ஜிபிஎஸ், செல்ஃபோன் கோபுரம், ப்ளூடூத் அல்லது வைஃபை சமிக்ஞைகள் கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது) உள்ளடங்குகிறது.
- திரவத் தரவுகள், இதில் Caterpillar அல்லது மூன்றாம் தரப்புக் கருவிகளைப் பயன்படுத்தி பெறப்பட்ட திரவ மாதிரிகள் (அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், ஹைட்ராலிக் மற்றும் குளிர் திரவங்கள்) மீதான பகுப்பாய்வு முடிவுகள் உள்ளடங்குகிறது.
- நிகழ்வுப் பதிவுத் தரவுகள், இதில் இடம், வேகம், திசை மற்றும் தொடர்புடைய வீடியோ பதிவுகள், கட்டுப்பாடுகளின் பயன்பாடு மற்றும் நேர்மறை இரயில் கட்டுப்பாட்டு தகவல்கள் ஆகியவை உள்ளடங்குகிறது.
- சேவை மற்றும் பராமரிப்பு வரலாறு, இதில் பணி ஆணைகள் (அனைத்துப் பராமரிப்பு, பழுது பதிவுகள், பாகங்கள் கொள்முதல், ஒரு சொத்தின் மாற்றம் மற்றும் திருத்தம்), பாகத்தின் வாழ்நாள் (ஒரு பாகத்தின் பயன்பாட்டு வரலாறு மற்றும் அணிதல் வாழ்நாள்), பராமரிப்பு காலஅட்டவணை, திட்டமிட்ட பராமரிப்பு, உத்தரவாதக் காப்புறுதித் தரவுகள், பராமரிப்பு மற்றும் பழுதுநீக்க ஒப்பந்தங்கள், சேவை இடைவெளிகள் (ஒரு சொத்துக்கான மாற்று நடவடிக்கைகளின் திட்டமிடப்பட்ட பராமரிப்புக்கான திட்டமிடப்பட்ட இடைவெளி), பாகங்களின் பட்டியல்கள் (ஒரு சொத்தின் அனைத்து பாகங்களின்) மற்றும் சேவைக் கடிதங்கள் (ஒரு சொத்தில் உள்ள பிரச்சனையைச் சரிசெய்ய Caterpillar பரிந்துரைக்கும் சிறப்புச் சேவை நடவடிக்கைகளின் விவரிப்பு).
- தலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள், இதில் செய்யப்படும் பணியின் வகை, சாலையின் நிலைமை, உயரம், காலநிலை மற்றும் பொருள் கண்காணிப்பு ஆகியவை உள்ளடங்குகிறது.
- பயன்பாட்டின் போக்குகள், இதில் ஒரு டிஜிட்டல் தயாரிப்புப்பொருள் வழியாக ஒரு தயாரிப்பு தொடர்பாக நீங்கள் எங்களுக்கு அளிக்கும் ஏதாவது பயனர் வரையறுக்கப்பட்ட தகவல்கள் உள்ளடங்குகிறது.
"இயக்கங்களின் தரவுகள்" என்பது நாங்கள் சேகரிக்கும் அல்லது மற்றபடி விநியோக வலையமைப்புகளால் வழங்கப்படும் எதேஎனும் கூடுதல் தகவல்கள் ஆகும், இவற்றில் உள்ளடங்கக்கூடியவை:
- விவரப்பட்டியல்கள் மற்றும் சேவை ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள்.
- விநியோக வலையமைப்புகளின் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள், இதில் அத்தகைய வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களது டீலர் விற்பனைப் பிரதிநிதிகள் தொடர்பான சில தனிப்பட்ட தகவல்கள் உள்ளடங்குகிறது.
- பணி ஆணைத் தரவுகள், இதில் வாடிக்கையாளர் பற்றிய தகவல், சொத்து சம்பந்தப்பட்ட தொடர்பு தகவல், அடையாளம் காணப்பட்ட பிரச்சனை மற்றும் எடுக்கப்பட்ட பழுதுநீக்கச் செயல்பாடுகள் உள்ளடங்குகிறது.
- ஸ்டோர் தரவரிசைத் தரவுகள், இதில் டீலர் சரக்கு இருப்பு அறிக்கை மற்றும் மீள்நிரப்பு செயல்முறைகளைப் பற்றிய தகவல்கள் உள்ளடங்குகிறது.
- சொத்துக்களை (சொந்தமாக அல்லது வாடகைக்கு) நிர்வகிப்பதற்காக விநியோக வலையமைப்புகள் பயன்படுத்தும் தகவல்கள், இதில் விநியோக வலையமைப்புகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பணித்தலங்கள் உள்ளடங்குகிறது.
- டீலர் பாகங்கள் தரவுகள், இதில் பாகங்களின் சரக்கு இருப்பின் நிர்வாகம் மற்றும் மீள்நிரப்பல், மற்றும் வாடிக்கையாளர் கொள்முதல்கள், திருப்பிக் கொடுத்தல்கள் மற்றும் மாற்றிக் கொடுத்தல்கள் உள்ளடங்குகிறது.
Caterpillar –ஆல் சேகரிக்கப்படும் தகவல்கள், ஒரே நேரத்தில் சிஸ்டம் டேட்டா, தனிநபர் தகவல் மற்றும் செயல்பாடுகள் தரவு அல்லது அதன் கலவையாக இருக்கலாம். Caterpillar -ஆல் தயாரிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான சாதனங்கள் தொடர்பான தரவுத் தகவல்கள், செயல்பாடுகள் தரவு அல்லது தனிநபர் தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் சமர்ப்பித்தால், அவ்வாறு செய்யவும் இந்தத் தகவல்களைத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையின்படி பயன்டுத்த எங்களுக்கு அனுமதி அளிப்பதற்கும் உங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் நீங்கள் உறுதி அளிக்கிறீர்கள்.
நாங்கள் எவ்வாறு தகவல்களை சேகரிக்கலாம்
நாங்கள் மற்றும் எங்கள் சேவை வழங்குநர்கள் பல்வேறு வழிகளில் தகவல்களைச் சேகரிக்கலாம், அவற்றில் இவை உள்ளடங்கலாம்:
- சாதனங்கள் மூலம்: நாங்கள் ஒரு சாதனத்துடன் இணைக்கப்பட்ட சொத்துகளிலிருந்து, செல்லுலார் அல்லது செயற்கைக் கோள் இணைப்பு, அல்லது ஒரு சாதனம் பொருத்தப்பட்ட சொத்துக்கள் நடைபெறும் ரேடியோ அல்லது ஈத்தர்நெட் இணைப்பு வழியாக தகவல் பெறலாம், இவற்றில் சிஸ்டம் டேட்டா (அதாவது சாதன அல்லது சொத்து தொடர்பான தகவல்) அல்லது தனிநபர் தகவல் (அதாவது சோர்வு கண்காணிப்பு சாதனங்கள், ஆன்-போர்ட் கேமரா மற்றும் அருகாமையைக் கண்டறிதல் அமைப்புகள், மற்றும் இன்-கேப் கண்காணிப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றால் உருவாக்கப்படும் தகவல்கள்) உள்ளடங்கலாம். தவறுக்கான குறியீடுகள், செயல்பாடு பணிநேரங்கள் மற்றும் எரிபொருள் அளவுகள் போன்ற சில தகவல்கள் தானாகவே சேகரிக்கப்படலாம்.
- செயலிகள் மற்றும் ஆன்லைன் மூலம்: நாங்கள் செயலிகள் மூலம் (எ.கா., நீங்கள் பராமரிப்புத் தகவலை உள்ளிடும்போது) அல்லது எங்கள் வலைத்தளங்கள், ஆன்லைன் சேவைகள் அல்லது தளங்களைப் பயன்படுத்தும் போது நாங்கள் தகவல்களைச் சேகரிக்கலாம். நீங்கள் ஆன்-சைட் சர்வர்கள் மூலம் தரவுப் பரிமாற்றத்தைத் தொடங்கும்போது, அல்லது மின்னஞ்சல் வழியாக ஆய்வுத் தகவலை எங்களுக்கு அளிக்கும்போது போன்ற பிற ஆன்லைன் வழிகளால் கூட நாங்கள் தகவலைப் பெறலாம். உலாவி மற்றும் சாதன தகவல், செயலிகள் பயன்பாட்டுத் தரவு, மற்றும் குக்கீகள், பிக்சல் டேக்ஸ் மற்றும் பிற தொழில்நுட்பங்கள், ஐபி முகவரிகள் மற்றும் இருப்பிடத் தகவல் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் போன்ற வலைத்தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பொதுவாக சேகரிக்கப்பட்ட தகவல்களையும் சேகரிக்கலாம்.
- ஆஃப்லைன்: எங்களுடன் அல்லது எங்கள் விநியோக வலைப்பின்னல்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளும்போது, எங்கள் வர்த்தக நிகழ்ச்சிகளில் ஒன்றில் கலந்துகொள்ளும்போது, ஒரு ஆர்டரை செய்யும்போது அல்லது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளும்போது நாங்கள் தகவலை சேகரிக்கலாம்.
- பாகங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் OEM -களில் இருந்து: உங்கள் சொத்துகளிலுள்ள பாகங்கள் அல்லது நீங்கள் பயன்படுத்துகின்ற மற்றவர்கள் உற்பத்தி செய்த சொத்துகளின் பாகங்களின் உற்பத்தியாளர்களிடமிருந்து சிஸ்டம் டேட்டாவைப் பெறலாம். இந்தத் தகவல்கள் எங்களுக்குத் தானாகவே வழங்கப்படலாம்.
- அணியக்கூடிய தொழில்நுட்பம் மூலம்: சோர்வு கண்காணிப்புச் சாதனங்கள் அல்லது ஹார்ட்ஹேட்ஸ் அல்லது பாதுகாப்பு அங்கிகளில் உட்பொதிக்கப்பட்ட RFID குறிச்சொற்கள் போன்ற அணியக்கூடிய தொழில்நுட்பம் மூலம் நாங்கள் தகவல்களை சேகரிக்கலாம்.
- சொத்து உரிமையாளர்கள், விநியோக வலையமைப்புகள் மற்றும் மற்றவையிடமிருந்து: சொத்து உரிமையாளர்கள், விநியோக வலையமைப்புகள், சொத்துரிமை உரிமையாளர்கள், விநியோக வலைப்பின்னல்கள், ஆப்பரேட்டர்கள் மற்றும் ஒரு சொத்திற்கு மேலாண்மை பொறுப்பு உள்ள பிற நபர்களிடமிருந்து கூடுதல் தகவல்களை நாங்கள் பெறலாம்.
- பிற மூலங்களிடமிருந்து: பொதுத் தரவுத்தளங்கள், கூட்டுச் சந்தைப்படுத்தல் கூட்டாளர்கள், சமூக ஊடகத் தலங்கள் (நீங்கள் நண்பர்களாக உள்ள அல்லது மற்றபடி இணைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து) மற்றும் பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்து பிற மூலங்களில் இருந்து உங்கள் தகவலைப் பெறலாம். பிரச்சனைகளைத் தீர்க்கும் தரவுகளிலிருந்து, உங்கள் சேவை வழங்குநர்களிடமிருந்து (திரவ ஆய்வாளர்கள் மற்றும் தல ஆய்வாளர்கள் போன்றவர்கள்) அல்லது பராமரிப்பு, ஆய்வு அல்லது உத்தரவாத பதிவுகளில் இருந்து தகவல் சேகரிக்கலாம் அல்லது உருவாக்கலாம்,
நாம் எவ்வாறு தகவல்களைப் பயன்படுத்துவோம்
நாங்கள் பின்வரும் நோக்கங்களுக்காக எங்கள் விநியோக வலையமைப்புகளை அனுமதிக்க, சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தலாம்:
- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சேவை வழங்க:
- நீங்கள் அல்லது டீலர் வியாபாரிகளின் சொத்துகளைக் கண்காணிக்கும் பொருட்டு, நீங்கள் செயலிகளைப் பயன்படுத்த, வாங்குதல்களை முடிக்க மற்றும் நிறைவேற்றவும், உங்கள் கொள்முதல் அல்லது வாடகைக்குத் தொடர்பாக உங்களுடன் தொடர்பு கொள்ளவும், தொடர்புடைய வாடிக்கையாளர் சேவையை உங்களுக்கு வழங்கவும் அனுமதிக்க.
- வாடிக்கையாளர் ஆதரவு உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செய்தல் மற்றும் வாடகை சொத்துக்கள் அல்லது பகுதிகளை அளித்தல்.
- பாதுகாப்பு, சொத்து சுகாதாரம், பராமரிப்பு, பணித்திறன் திறன் மற்றும் ஆப்பரேட்டர்களுக்கு உற்பத்தித்திறன் பயிற்சி பற்றிய பரிந்துரைகள் செய்ய.
- சொத்துகள், பிற பொருட்கள் அல்லது மனிதர்களைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிப்பதன் மூலம் இயந்திர நடவடிக்கைகளின் பாதுகாப்பை அதிகரிக்க.
- தொலைநிலைப் பழுது நீக்கல் மற்றும் தொலைநிலை ட்யூனிங் போன்ற தொலைநிலை டெக்னீசியன் சேவைகளை செயல்படுத்த.
- இருப்பிட அடிப்படையிலான சேவைகள் மற்றும் உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்க.
- தகவல் தொடர்புகளைச் செயற்படுத்த:
- சொத்து அல்லது சாதனத்திற்கான இணைப்பை நிர்வகிக்க.
- செயலிகள் மூலம் நீங்கள் மற்றும் செயலிகளின் பிற பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அனுமதிக்க.
- நிர்வாக அல்லது ஒப்பந்தத் தகவலை அனுப்ப, எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் தயாரிப்புப்பொருட்கள், உத்தரவாதக் கொள்கை அல்லது சேவை ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய தகவல்களை அனுப்ப.
- புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய தகவலை உங்களுக்கு வழங்குவதற்கும், உங்களுக்கு ஆர்வம் உள்ளதாக நாங்கள் நம்புகின்ற மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளை அனுப்ப.
- பொது வணிக நோக்கங்களுக்காக:
- சந்தை ஆராய்ச்சி நடத்த அல்லது Caterpillar அல்லது விநியோக வலையமைப்புகளை மதிப்பீடு செய்ய.
- தரவுப் பகுப்பாய்வு, தணிக்கை, தயாரிப்புகள் மேம்படுத்துதல், புதிய தயாரிப்புகளை உருவாக்குதல், எமது டிஜிட்டல் தயாரிப்புப்பொருட்களை மேம்படுத்துதல், அல்லது மாற்றுவது, பயன்பாட்டு போக்குகளை அடையாளம் காண்பது மற்றும் எங்கள் வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் பென்ச்மார்க்கிங் அறிக்கைகள் போன்ற ஒன்றுசேர்க்கப்பட்ட மற்றும் அடையாளம் நீக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் புள்ளியியல் பகுப்பாய்வு செய்ய.
- வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க, பணி ஓட்டத்தை நிர்வகிக்க, பழுதுபார்க்கும் முறை, திட்டப்பணி எதிர்கால பராமரிப்பு மற்றும் சேவை மற்றும் சிக்கல்களைச் சரிசெய்ய.
- பரிந்துரைகளின் செயல்திறனைச் சரிபார்க்க, புகார்களைத் தீர்க்க, மற்றும் ஆர்டர்களை நிறைவேற்ற.
- உங்களுக்கு பாகங்கள் மற்றும் சேவைகளை வழங்க இயலுவதற்காகச் சரக்கு இருப்புகளை நிர்வகிக்க.
- சொந்தமான அல்லது வாடகைக்கு எடுத்த சொத்துளை நிர்வகிக்க.
- செயல்பாடுகளின் திறனை அதிகரிக்க மற்றும் விற்பனையை அதிகரிக்க.
- டிஜிட்டல் செயலிகளை உருவாக்க.
- பிற பயன்கள்:
- உங்களை ஸ்வீப்ஸ்டேக்குகள், போட்டிகள் அல்லது ஒத்த விளம்பரங்களில் பங்கேற்க அனுமதிக்க மற்றும் இந்த நடவடிக்கைகளை நிர்வகிக்க. இந்தச் செயல்பாடுளில் சிலவற்றுக்கு கூடுதல் விதிகள் உள்ளன, உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் வெளியிடுகிறோம் என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களை இவை கொண்டிருக்கக்கூடும். நீங்கள் Caterpillar உலகளாவியத் தரவு தனியுரிமை அறிக்கை எந்த பொருந்தக்கூடிய தனியுரிமை அறிக்கைகள் ஆகியவை உட்பட அத்தகைய விதிகளைக் கவனமாகப் படிக்குமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.
- நீங்களும் நாங்களும் ஒப்புக்கொண்டபடி கூடுதல் பயன்பாடுகளுக்காக.
ஒரு நபரை அடையாளம் காணக்கூடிய ஒலி-ஒளித் தரவுகளை அல்லது அடையாளம் காணக்கூடிய ஒரு நபரின் உடலியல் தரவுகளைப் பொறுத்தவரை, நாங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதோடு, பாதுகாப்பிற்காகப் பரிந்துரைகள் செய்ய, சொத்து நிலை, பராமரிப்பு, பணியிடச் செயல்திறன் மற்றும் ஆபரேட்டர்களுக்கு உற்பத்தி திறன் பயிற்சி, உட்பட எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதலுக்காக மட்டுமே அந்த தரவுகளைப் பயன்படுத்துவோம்.
நாங்கள் எவ்வாறு தகவல்களை வெளியிடக்கூடும்
நாங்கள் இவற்றுக்காகத் தகவலை வெளியிடலாம்:
- இந்த தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக Caterpillar இங்க்.- ஐ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தப்படும் அல்லது பொதுவான கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ("கூட்டு நிறுவனங்கள்"). Caterpillar இங்க். தனது கூட்டாளிகளுடன் கூட்டாகப் பயன்படுத்தும் தகவல்களுக்குப் பொறுப்பு ஆகும்.
- உங்களுடனான உறவை பராமரிப்பதற்காக சிஸ்டம் டேட்டா மற்றும் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவதற்கு விநியோக வலையமைப்புகளுக்கு, உங்களுக்கு சேவைகளை வழங்கவும், மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்பவும்.
- சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்களின் சொத்துக்களை தங்களின் பயன்பாட்டை நிர்வகிக்க அனுமதிக்க.
- தரவுப் பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதி, பயன்பாடு மேம்பாடு, தளம் ஹோஸ்டிங், வாடிக்கையாளர் சேவை, தயாரிப்பு மேம்பாடு, தணிக்கை, ஆலோசனை மற்றும் பிற சேவைகள் போன்ற சேவைகளை வழங்குகின்ற எங்கள் சேவை வழங்குநர்களுக்கு.
- பாகங்கள் உற்பத்தியாளர்களிடம், தங்கள் தயாரிப்புகளைப் பயன்பாட்டை ஆய்வு செய்ய, தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் அனுமதிக்க.
- முகவர்கள், சேவை வழங்குநர்கள் அல்லது மூன்றாம் நபர்கள் சொத்துடன் நிர்வாகத்தின் பொறுப்பை கொண்டுள்ள சொத்து உரிமையாளர்களோடு ஒப்பந்தம் செய்த அல்லது ஈடுபட்டவர்களுக்கு.
- எங்களின் அல்லது எங்கள் கூட்டு நிறுவனங்களின் வணிகம், சொத்துகள் அல்லது பங்கின் (எந்தவொரு திவாலா நிலை அல்லது இதேபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உட்பட) அல்லது எந்தவொரு பகுதியையோ மறுசீரமைப்பு, இணைப்பு, கூட்டு முயற்சி, ஒதுக்கீடு, விற்பனை, அல்லது பிறவகையில் விற்பது) தொடர்பாக மூன்றாம் தரப்புக்கு.
- இந்த தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையுடன் இணக்கமாக Cat டெவலப்பர் போர்ட்டல் அல்லது மற்ற ஒத்த API -களின் மூலம் தரவுகளைக் கிடைக்கச் செய்ய.
- நீங்கள் மற்றும் நாங்கள் ஒப்புக்கொண்டவாறு கூடுதல் பெறுநர்களுக்கு.
இருப்பிடத் தரவுகள்: உள்ளூர் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கு, இருப்பிட தகவல் மற்றும் விநியோக வலையமைப்புகளுடன் இருப்பிட தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில், இத்தகைய பயன்பாடுகளை அனுமதிக்கவோ அல்லது மறுக்கவோ அல்லது உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை பகிரவோ அனுமதிக்கப்படலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் மற்றும் / அல்லது எங்கள் துணை நிறுவனங்கள் மற்றும் விநியோக வலையமைப்புகள் உங்களுக்குப் பொருந்தக்கூடிய சேவைகளை மற்றும் உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்க முடியாமல் போகலாம்.
தேவையான அல்லது பொருத்தமானதாக நாங்கள் நம்புகிறவாறு நாங்கள் தகவல்களைப் பயன்படுத்தவோ அல்லது வெளியிடவோ செய்யலாம்: (a) பொருந்தும் சட்டத்தின் கீழ், உங்கள் நாட்டிற்கு வெளியில் உள்ள சட்டங்கள் உட்பட; (b) சட்ட செயல்முறைக்கு இணங்க; (c) உங்கள் நாட்டிற்கு வெளியே பொது மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பொது மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து சட்டப்பூர்வ கோரிக்கைகளுக்கு பதிலளிக்க; (d) எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை செயல்படுத்த; (e) எமது செயற்பாடுகளையும் எமது இணை மற்றும் விநியோக வலையமைப்புகளையும் பாதுகாக்க; (f) எங்கள் உரிமைகள், தனியுரிமை, பாதுகாப்பு அல்லது சொத்து, அல்லது / அல்லது எங்கள் கூட்டாளிகள், விநியோக வலையமைப்புகள், நீங்களோ அல்லது மற்றவையோ பாதுகாக்க, தகவல் பாதுகாப்புக்கான நோக்கங்களுக்காக; மற்றும் (g) நமக்கு கிடைக்கக்கூடிய தீர்வுகளை பின்பற்ற எங்களை அனுமதிக்க அல்லது நாங்கள் எதிர்கொள்ளக்கூடிய சேதங்களைக் கட்டுப்படுத்த.
அடையாளம் நீக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட தகவல்கள்: நாங்கள் பொருந்தும் சட்டத்தின் கீழ் மற்றபடி செய்ய வேண்டிய அவசியம் தவிர வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் அடையாளம் நீக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட தகவல்களை (அதாவது, உங்களை அடையாளம் காட்டாத தகவல்கள் அல்லது டிஜிட்டல் தயாரிப்புப்பொருட்களின் வேறு எந்த பயனையும் நாங்கள் பயன்படுத்தவோ வெளியிடவோ செய்யலாம்.
தொலைநிலைச் சேவைகள் மற்றும் புதுப்பித்தல்கள்
Cat® தொலைநிலைச் சேவைகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட Product Link™ டெலிமாட்டிக்ஸ் மற்றும் Cat உபகரணக் கட்டுப்பாடு நிரல்கூறு மென்பொருளுக்கான மென்பொருள் புதுப்பித்தல் செயல்முறை, -இல் மேலும் விவரிக்கப்பட்டபடி உங்கள் சாதனம் மற்றும் சொத்துக் கட்டமைப்பைப் பொறுத்து, நாங்கள் சிஸ்டம் டேட்டாவைத் தொலைநிலையிலிருந்து பயன்படுத்தலாம்:
- நாங்கள் தயாரித்த அல்லது மற்றபடி வழங்கும் பிற சாதனங்களை (எ.கா., சிஸ்டம் அமைப்புகளைப் புதுப்பித்தல் அல்லது Caterpillar அல்லது எங்களது` துணை நிறுவனங்களுடன் இணைக்கப் பயன்படும் தகவல்தொடர்புக் கடத்திகளை நிர்வகிப்பதற்கு) சாதனங்களைப் பரிசோதித்தல் மற்றும் புதுப்பித்தல்.
- உங்கள் Cat சொத்துக்கான இயந்திரச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மென்பொருளைப் புதுப்பிக்கவும், ஒரு புதுப்பித்தலை தயாரிப்பதில் சொத்துக்கு மென்பொருள் புதுப்பிப்புக் கோப்புகளை நாங்கள் உள்நுழைக்கலாம்.
தொலைநிலை மென்பொருள் புதுப்பித்தல்களை நாங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்றும் தொலைநிலை மென்பொருள் புதுப்பித்தல்கள் தொடர்பான உங்கள் விருப்பங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து Cat® தொலைநிலைச் சேவைகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட Product Link™ டெலிமாட்டிக்ஸ் மற்றும் Cat உபகரணக் கட்டுப்பாடு நிரல்கூறு மென்பொருளுக்கான மென்பொருள் புதுப்பித்தல் செயல்முறை –ஐப் பார்க்கவும்.
பாதுகாப்பு
எங்கள் நிறுவனத்திற்குள் தகவல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ள நியாயமான நிறுவன, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். துரதிருஷ்டவசமாக, எந்த தரவுப் பரிமாற்றமும் அல்லது சேமிப்பு அமைப்பும் 100% பாதுகாப்பாக இருக்க உத்தரவாதம் அளிக்க முடியாது. எங்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளுதல் இனி பாதுகாப்பாக இல்லை என்று நீங்கள் நம்பினால், (இனி, உங்கள் கணக்கின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டது என்று நீங்கள் உணர்ந்தால்), உடனடியாக எங்களுக்கு "எங்களைத் தொடர்புகொள்ளுதல்" பிரிவில் உள்ளது போல் தெரிவியுங்கள்.
தனிப்பட்ட தகவல் தேர்வுகள் மற்றும் அணுகல்
தயவுசெய்து உங்கள் பயன்பாடு மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவலை வெளியிடுதல் தொடர்பான உங்கள் உரிமைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வதற்கு Caterpillar உலகளாவியத் தரவு தனியுரிமை அறிக்கை மற்றும் பொருந்தும் எந்தத் தனியுரிமை அறிக்கைகளையும் பார்க்கவும்.
பிற முக்கியமான தகவல்கள்
மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்: இந்த தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கை பின்வருபவற்றை கையாள்வதில்லை மற்றும் இவற்றுக்கு பொறுப்பு வகிக்காது(i) டிஜிட்டல் தயாரிப்புப் பொருட்கள் இணைக்கும் எந்த வலைத்தளம் அல்லது ஆன்லைன் சேவையை இயக்கும் எந்த மூன்றாம் தரப்பின் தனியுரிமை, தகவல் அல்லது மற்ற நடைமுறைகள் (உ.ம்., எங்களுடன் வியாபார உறவு இல்லாத ஒரு மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட உள்ளூர் வானிலை தகவல்களுக்கான் ஒரு ஹைப்பர்லிங்க் எங்களது செயலிகளில் அடங்கலாம்) மற்றும் (ii) மூன்றாம் தரப்பினரால் கட்டுப்படுத்தப்படும் தனிப்பட்ட தகவல், வழங்குபவர், சேவை வழங்குநர் அல்லது வாடிக்கையாளர் போன்ற தனிப்பட்ட தகவல் சேகரிப்பது, அத்தகைய தனிப்பட்ட தகவல் Caterpillar –ஆல் சேகரிக்கப்பட்டாலும் அல்லது மற்றபடி செயல்படுத்தப்பட்டாலும் கூட. மேலும், ஒரு டிஜிட்டல் தயாரிப்புப் பொருளில் ஒரு இணைப்பைச் சேர்ப்பது இணைக்கப்பட்ட தலம் அல்லது எங்களால் அல்லது எங்கள் துணை நிறுவனங்களால் அளிக்கப்படும் சேவையின் அங்கீகாரத்தை குறிக்காது.
நாட்டுக்கு வெளியே இடமாற்றங்கள்: நாங்கள் செயல்படும் எந்த நாட்டிலும் அல்லது எங்களுடைய சேவை வழங்குநர்கள் செயல்படும் எந்த நாட்டிலும் உங்கள் தகவல்கள் சேமிக்கப்படலாம் மற்றும் செயலாக்கப்படலாம், மற்றும் ஒரு டிஜிட்டல் தயாரிப்புப் பொருளை பயன்படுத்துவதன் மூலம் அல்லது இந்த தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கைக்கு இணங்க எங்களுக்குத் தரவை வழங்குவதன் மூலம் உங்கள் நாட்டிலிருந்து வேறுபட்ட தரவுப் பாதுகாப்பு விதிகள் கொண்டிருக்கும் அமெரிக்கா உட்பட வேறு நாட்டுக்குத் தகவல்கள இடமாற்றம் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
உணர்ச்சிமிக்க தகவல்கள்: சமூகப் பாதுகாப்பு எண்கள், இன, அல்லது இனமூலம் தொடர்பான தகவல், அரசியல் கருத்துக்கள், மதம் அல்லது பிற நம்பிக்கைகள் அல்லது மரபுசார் பண்புகள், குற்ற பின்னணி அல்லது தொழிற்சங்க உறுப்பினர் ஆகியவை போன்ற நுட்பமான தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு அனுப்புவதற்காக எங்கள் டிஜிட்டல் தயாரிப்புப் பொருட்கள் வடிவமைக்கப்படவில்லை. டிஜிட்டல் தயாரிப்புப் பொருட்கள் மூலமாக அல்லது மற்றபடி எங்களுக்கு இதுபோன்ற தகவல்களை அனுப்பவேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
விநியோக வலையமைப்புகள்: விநியோக வலையமைப்புகள், அவற்றின் சொந்தத் தனியுரிமை அறிக்கைகள் மற்றும் தரவுகள் நிர்வகித்தல் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். இத்தகைய அறிக்கையைச் சீராக மீளாய்வு செய்யும்படி நாங்கள் ஊக்குவிக்கிறோம். இத்தகைய அறிக்கைகள் மற்றும் கொள்கைகள் பொருந்தக்கூடிய டீலருக்கு தனித்துவமானவை, மேலும் இந்த தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கை, Caterpillar உலகளாவிய தரவு தனியுரிமை அறிக்கை மற்றும் பொருந்தக்கூடிய தனியுரிமை அறிக்கைகள் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களை சேகரித்தல், பயன்பாடு, வெளிப்படுத்தல் அல்லது மேலாண்மைக்கு பொருந்தாது. .
இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கைக்கான புதுப்பித்தல்கள்
நாங்கள் இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையை மாற்றலாம். இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் குறிக்கப்பட்டுள்ள "கடைசியாக புதுப்பிக்கப்பட்டது" என்ற குறியீடு இந்த தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கை எப்போது கடைசியாகத் திருத்தப்பட்டது என்று குறிக்கிறது. திருத்தப்பட்ட தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது எந்த மாற்றங்களும் அமலுக்கு வரும். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து டிஜிட்டல் தயாரிப்புப்பொருளை நீங்கள் பயன்படுத்துவது என்பது திருத்தப்பட்ட தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கைக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று பொருளாகும்.
எங்களைத் தொடர்புகொள்ளுதல்
இந்தத் தரவுகளை நிர்வகித்தல் குறித்த அறிக்கையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை இங்கு தொடர்பு கொள்ளவும் [email protected].